
மகாராஷ்டிராவில் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் இவர் இனி வரும் காலங்களில் மகாராஷ்டிராவில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மற்றும் அதனை கட்டாயமாக்க வேண்டும் என்று இப்பொழுது ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த மூன்றாம் மொழியான ஹிந்தி திணிப்புக்காக மும்பையில் கண்டன பேரணி நடைபெற்றது இதில் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர் ஏனென்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தாய்மொழியான மராட்டி இதைத்தான் நம் மகாராஷ்டிராவில் வளர்க்கவேண்டும் மற்ற மொழியை திணிக்க கூடாது என்று போராட்டம் நடைபெற்றது.

இதன் விளைவாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இப்பொழுது அதற்கு தற்காலிகமாக ஒத்தி வைப்பு மேற்கொண்டுள்ளார் இதற்கு தனிக்குழு அமைத்து ஹிந்தி பற்றிய பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கு முடிவு இனிவரும் காலங்களில் எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் இதனை பற்றிய அந்த தீர்மானத்தை அரசாணை திரும்ப பெற்றது இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டம் நடத்திய மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே நம் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்று பேசப்பட்டு வருகிறது.