
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் மடப்புரம் கோவிலில் பக்தர்கள் வந்த காரில் உள்ள நகை காணாமல் போன விவகாரத்தில் போலீசார் அனைவரும் காவலில் இருந்த அஜித் குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் விசாரிக்கும் என்ற பெயரில் தாக்கப்பட்டு மரணம் அடைய செய்தனர்
இந்த விவகாரமானது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதில் அவரை அழைத்துச் சென்ற போலீஸ் காரர்கள் தனிப்படையை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளிவந்தது இதில் அவர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த நிலையில் அவர் அதிகமாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் இப்பொழுது காவல்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார் இது போல் சம்பவம் இனிமேல் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று அவர் முடிவெடுத்து இருக்கிறார் இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஒட்டி உள்ளது.

இந்த சம்பவம் ஆனது சினிமா பாணியில் நடந்துள்ளது ஏனென்றால் ஜெய் பீம் படத்தில் வரும் ஒரு தத்துவமான காட்சி தான் இந்த லாக்கப் கொலை இதில் போலீஸார்கள் சம்பந்தப்பட்டிருக்கிறதனால் இந்த வளக்கானது இல்லாமல் போய்விடும் என்று மக்கள் கவலைப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது தமிழக அரசு எடுத்து இதில் என்ன நடந்தது என்று இப்பொழுது விசாரித்துக் கொண்டிருக்கிறது.