
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒரு இடத்திற்கு செல்வதற்கு அலுப்புபட்டு கொண்டு வீட்டிலேயே தான் இருக்கிறார்கள் ஏனென்றால் மக்கள் அனைவரும் சோம்பேறித்தனமாக உள்ளார்கள் ஒரு கடைக்கு செல்வதற்கு கூட அவர்களுக்கு நேரமோ எதுவும் இல்லை அதனால் ஆர்டர் ஆன்லைனில் செய்கிறார்கள் இந்த நிலையில்
அன்றாடம் நம் உண்ணும் உணவை கூட இப்பொழுது சோமடோ,ஸ்விக்கி என்ற நிறுவனங்களிடம் இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் இதில் இப்பொழுதும் சிக்கல் ஏற்பட்டது ஏனென்றால் சோமடோ,ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் கமிஷன் என்ற பெயரில் மக்கள் பணம் மற்றும் ஹோட்டலின் பணத்தையும் முப்பது சதவீதம் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு ஹோட்டலில் ரூ.50 கிடைக்க கூடிய ஒரு உணவை சோமடோ,ஸ்விக்கி இந்த இரு நிறுவனமும் இப்பொழுது அதை 100 ரூபாய்க்கு விற்கிறது இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் விலை கூடுதலாக உள்ளது என்று ஹோட்டல் உரிமையாளர்களிடம் சொல்லி வந்தன இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இப்பொழுது இதற்கான ஒரு நடவடிக்கை ஒன்று எடுத்து உள்ளது கமிஷனை குறைக்க வேண்டும் என்று சோமடோ,ஸ்விக்கியிடம் இப்பொழுது கூறியுள்ளது.

இந்த நிலையில் இப்பொழுது இனிவரும் நாட்களில் கமிஷனை குறைக்காவிட்டால் நாங்கள் எந்த ஆர்டரையும் எடுக்கப் போவதில்லை என்று ஹோட்டல் உரிமையாளர் சங்கம் இப்போது திட்டவட்டமாக கூறியுள்ளது.