
கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போதும் விமானம் கிளம்பும் பொழுதும் லேசர் ஒளியை அடிக்கும் மர்ம நபர்கள். இதனால் விமானத்தை இயக்குபவர்கள் மீது இந்த லேசர் ஒளியை அடிக்கும் பொழுது சிறிது நேரம் பார்வைத் திறனை இழக்கின்றனர் இதனால் பெரும் அபாயம் நடக்கக்கூடும்.

கடந்த சில வாரங்களில் மூன்று முறை லேசர் ஒளியை விமானம் தரையிறங்கும் போது அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது இதனை ஓட்டி காவல் துறையினர் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகிகள் பரங்கிமலை மற்றும் கிண்டி காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளன காவல்துறையினர்.

இனி வரும் நாட்களில் விமான நிலையம் அருகே பலூன் மற்றும் லேசர் லைட்டுக்கு தடை விதிக்கப்பட்டது மீண்டும் இந்த தடையை மீறி யாராவது பலூன் மற்றும் லேசர்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
காவல்துறை எவ்வளவு தான் தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் சிலர் இதே போல் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இப்படி தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அது அந்த விமானத்தை இயக்கும் விமானிக்கு ஒரு மிகப்பெரிய சிக்கலை உண்டு பண்ணும் ஆதலால் விமானம் ஆபத்துகளில் கூட சிக்கி விடலாம் என்று கூறி வருகின்றனர் ஆதலால் இந்த மாதிரி தவறுகளை செய்பவர்கள் தாங்கலாக மனம் திரும்பி இந்த தவறுகளை செய்யக்கூடாது என்றும் காவல்துறை இப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.