
நேற்று நடந்த ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் இதில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது இதனை ஒட்டி அவர் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில் ஜி 7 மாநாடு நடந்து கொண்டிருக்கும் பொழுதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நாள் முன்னரே கிளம்பி விட்டார் இதனை ஒட்டி அதிபர் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை இதற்கு இடையே அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் சுமார் 35 நிமிடம் உரையாடி உள்ளனர் அது என்னவென்றால் செந்தூர் ஆபரேஷனை நிறுத்தியது நாங்கள்தான் என்று சொன்ன அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கு நீங்கள் ஒன்றும் காரணம் இல்லை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்தான் நாங்கள் போரை நிறுத்தினோம் என்று பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்ததாக கூறியுள்ளார்கள்.

மேலும் பிரதமர் மோடியை கனடா பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும் அமெரிக்காவுக்கு அழைத்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார் இதற்கு பிரதமர் மோடி அலுவலக வேலை இருக்கிறதாகவும் வர இயலாது என்பதை பிரதமர் தெரிவித்ததாகவும் இதை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.