
மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3d வீடியோவை மத்திய அரசு வெளியிட்டது இந்த வீடியோவில் எதிர்காலத்தில் வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டமைப்பை 3டி படமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது இதனை அனைத்து மக்களும் கண்டு களித்து வருகின்றன.
மதுரையில் உள்ள தோப்பூரில் 220 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது தான் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை இந்த கட்டுமான பணியானது 2024 மே-யில் துவங்கியுள்ளது இந்த கட்டுமான பணிக்கான அடிக்கல் 2019 ல் நாட்டப்பட்டது இந்த கட்டுமானத்தின் மதிப்பு 2021 கோடி.

இந்த கட்டுமான பணியானது 2026 ஆம் ஆண்டின் முதற்கட்ட பணியும் 2027 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட பணியும் முடிவதாக தகவல் வெளியாகி உள்ளது மற்றும் இதில் 900 படுக்கை கொண்ட வசதியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று அறிவித்ததன் முதலாகவே மதுரை மட்டுமல்ல தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் தங்களுக்கே ஒரு மிகப் பெரிய பயனாக இந்த மருத்துவமனை அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஆனால் இன்றுவரை மருத்துவமனையின் உடைய வேலைப்பாடுகள் முடியாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளிக்கிறது இருந்தாலும் இப்போது வெளியிடப்பட்ட இந்த 3d வீடியோ கூடிய சீக்கிரம் அங்கு மருத்துவமனை வருவதற்கான சாத்தியக்கூறுகளை தருவதால் மக்கள் இப்போது பெருமூச்சு விட்டு வருகின்றனர்.