
சில நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதில் அவர் தமிழகத்தில் கூட்டணி கட்சி அமைவதைப் பற்றி விரிவாக பேசியுள்ளார் அதில் இனிவரும் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சி அமைய வேண்டும் என்று அதில் அதிமுக பங்கு வகிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கூட்டணி கட்சி என்பது மற்ற கட்சிகளுக்கு ஒரு பொதுவான எதிர்க்கட்சியை வீழ்த்துவது ஆகும் ஏனென்றால் பல வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை கூட்டணி கட்சிகளாக சேர்ந்து அந்த கட்சியை வீழ்த்துவது தன் கூட்டணி என கூறப்படுகிறது இதனால் கூட்டணி கட்சியில் எந்த கட்சியை இணைந்திருக்கிறதோ அவர்களுக்கு கொள்கை ஒன்றுமில்லை அந்த கட்சியை வீழ்த்துவதில் தான் முழு நோக்கமே.

இந்த விதமான கூட்டணி கட்சி 1967இல் ராஜாஜியும், அண்ணாவும் வரலாற்றிலேயே முதன்முறையாக கூட்டணி கட்சி அமைத்தனர் இதன் தொடர்பாக அடுத்தடுத்து வரப்போகும் காலங்களிலும் கூட்டணி கட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி வந்தன இந்த நிலையில் இப்பொழுது பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைத்துள்ளது இதில் பாஜக கூட்டணியில் அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக ஆவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் அதிமுக நிச்சயமாக தோல்வியை தழுவும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார் ஆனால் முதல்வர் அஇஅதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்கிற பயத்தில் இவ்வாறு கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறி வருகிறார் அது மட்டும் அல்ல இந்த கூட்டணி என்பது மிகவும் வலுவான நேர்த்தியான கூட்டணியாக இருப்பதால் இந்த முறை எங்களுடைய கூட்டணி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்