
கடந்த சில மாதங்களுக்கு முன் சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலை ஒட்டி பாகிஸ்தான் எதிர்தாக்குதல் நடத்தியது இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஏவுகணையை ஏவியது இதனை ஒட்டி அந்த ஏவுகணைகளை இந்தியாவின் பாதுகாவலன் என்ற பெயரை வைத்த எஸ் 400 அதிநவீன வான் பாதுகாப்பு சாதனம் அந்த ஏவுகணைகளை தர மட்டமாக ஆக்கியது.
இதனை ஒட்டி நம் நாட்டில் அந்த எஸ்400 என்ற வான் பாதுகாப்பு சாதனம் நம் இந்தியாவுக்கு கிடைத்ததில் மிகவும் சந்தோஷம் என்று நம் இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் இதனை ஒட்டி ரஷ்யாவிடம் இப்பொழுது நடந்த மாநாட்டில் இந்தியா எஸ் 400 மிகவும் அருமையாக உள்ளது என்று மீண்டும் மீதமுள்ள அந்த இரண்டு எஸ் 400 அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.

நீங்கள் கேட்கலாம் அது என்ன மீதமுள்ள எஸ் 400 என்று இந்தியா 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் மொத்தமாக ஐந்து எஸ் 400-ஐ வாங்க ஒப்பந்தம் போட்டுக் கொண்டது இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா வெறும் மூன்று தான் அனுப்பியுள்ளது மீதமுள்ள 2 அனுப்பவில்லை ஏனென்றால் ரஷ்யா உக்ரேன் இடையே போர் நடப்பதால் அதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் இப்பொழுதே ரஷ்யாவும் திட்டவட்டமாக கூறியுள்ளது வருகிற 2027 ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரண்டு எஸ் 400 டே இந்தியாவுக்கு நாங்கள் தந்து விடுவோம் என்று இப்பொழுது உறுதியளித்து உள்ளது.