
மாரடைப்பு என்பது மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் வரக்கூடிய ஒரு அதி மோசமான பாதிப்பாகும் இந்த வகையான பாதிப்பு மக்களின் உயிரை கூட சில நேரங்களில் பறிக்க கூடிய ஒன்றாகும் இதில் மூன்று கட்ட அளவில்தான் இதன் செயல்பாடுகள் உள்ளன இதை நாம் முதல் கட்டத்திலேயே மருத்துவரை சந்தித்து இதற்கான பரிந்துரை மற்றும் இதற்கான சிகிச்சையை நம் கட்டாயமாக பெற வேண்டும் இல்லையென்றால் இதனால் பாதிப்பு அதிகம்.

இந்த மாரடைப்பானது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து இருப்பதால் ஏற்படக்கூடிய ஒன்றாகும் இந்த கொழுப்பு படலமானது ரத்தம் செல்லும் பொழுது ரத்தத்தின் வேகத்தையும் ரத்தம் செல்லும் பாதையையும் அடைக்கிறது மற்றும் குறைக்கிறது ஒரு அதிர்ச்சியான நிகழ்வை மக்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு அந்த செய்தியானது வரும் பொழுது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் ரத்தம் வேகமானது அதிகரிக்கும் அப்பொழுது ரத்தம் செல்லவில்லை என்றால் அப்பொழுது தான் இந்த மாரடைப்பானது நிகழ்கிறது.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் என்னவென்றால் தலைவலி, நெஞ்சில் அழுத்தம், குளிர்வேர்வை, சோர்வு, குமட்டல் செரிமானம் இந்த வகையான பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது மற்றும் இது மிகவும் பார்க்கக்கூடிய முக்கியமான ஒரு விதமான பாதிப்பாகும் மேலும் இந்த பாதிப்பை தவிர்ப்பதற்கு நாம் எண்ணெய் சேர்த்த பண்டங்களை சாப்பிடுவதை குறைக்கவும் அதுதான் முதலில் நம் ரத்தத்தில் கொழுப்பு படலத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.