
புற்றுநோய் இந்த நோய் தான் உலகிலேயே இரண்டாவது இறப்பிற்கு காரணமான ஒரு முக்கியமான நோயாகும் இந்த நோய் மக்களுக்கு வந்து விட்டால் சரியாவது மிகவும் சிரமமாக கூடும் மேலும் இந்த நோய்க்கான மருந்துகளை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டே தான் இருக்கிறார்கள் மேலும் இந்த வகையான நோய் மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் உயிரை பறிக்கக் கடிய நோயில் இதுவும் ஒன்று.

மேலும் இந்த நோயின் அறிகுறிகள் என்னவென்றால் உடம்பு சோர்வு இடைபருமன் அதிகரிப்பது அல்லது குறைவது மற்றும் உணரக்கூடிய கட்டி மற்றும் தடிமனான பகுதி இது உடம்பில் எந்த இடத்தில் வேணாலும் இந்த புற்றுநோய்க்கான கட்டியானது உருவாக கூடும் மேலும் இது முக்கியமாக வாயில் மற்றும் தோள்பட்டைக்கு கீழ் உள்ள இடங்களில் அதிகமாக வரக்கூடிய ஒன்றாகும் இந்த புற்றுநோய் ஆனது ஒரு கட்டி வடிவில் மற்றும் தடிமனான வரக்கூடிய ஒன்றாகும்.

இதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன இதனால் நமக்கு உணவு செரிமானம் ஆகுவதிலும் பிரச்சனை வரலாம் மற்றும் தூங்கும் பொழுதும் வேர்வை அதிகமாக வரலாம் மேலும் உணவு உண்ணும் பொழுதும் தண்ணீர் குடிக்கும் பொழுதும் தொண்டையில் ஏதேனும் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தால் அதற்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் காரணமாக இருக்கலாம் என்று ஒரு சில மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.