
இனி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுகவின் நிர்வாகியான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் அதிமுக இப்பொழுது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது இந்த கூட்டணி திமுகவிற்கு பிடிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சுட்டி காட்டி உள்ளார்.
ஏனென்றால் சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த முறை அதிமுக தான் வெற்றி பெறும் அதில் பாஜக கூட்டணியுடன் இணைந்து அதிமுகவில் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 500 மேலான அறிவிப்புகளை வெளியிட்டது இதில் திமுக அதை நிறைவேற்றவில்லை இன்று எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்ததில் அவர் திமுகவினரை சரமாரியாக சுட்டிக்காட்டி உள்ளார் சொல்வதாக வாக்கு கொடுத்துவிட்டு வாக்கை தவறவட்டீர்கள் என்று குத்தி காட்டி உள்ளார்.

இந்த வட்டம் கண்டிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறும் என்று கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் ஏனென்றால் திமுக அறிவித்த எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை ஆனால் அதிமுக அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றியுள்ளது என்று திமுகவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளார் அடுத்த மாதம் ஜூலை 7ஆம் தேதி அன்று அதிமுக அத்தனை தொகுதிகளிலும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது.