Ulloor News

ஆட்சியை பிடிக்க சுற்றுபயணத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி

Share the Valuable Post

நடக்க இருக்கும் 2026 தேர்தலை ஒட்டி இப்பொழுது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இதில் இவர் ஜூலை 7 அதாவது இன்று சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் இது சுமார் 15 நாட்கள் நடக்கக்கூடிய சுற்றுப்பயணம் ஆகும் இதில் கோவை சுற்றியுள்ள தொகுதிகளில் அவர் பங்கேற்க உள்ளார்

edapadi-palanisamy-election-campign-2026-ulloornews

இந்த சுற்றுப்பயணம் ஆனது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொகுதிகளுக்கு சென்று இவர் உரையாட உள்ளார் இதில் அனைத்து தொகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து பரிந்துரைகளை கேட்க உள்ளார்
மற்றும் இவர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் வனபத்ர காளியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் ஒரு சிறப்பான பூஜையில் நடத்திவிட்டு இப்பொழுது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்

இந்த பயணம் ஆனது மக்களுக்கு ஒரு நல்ல ஒரு விழிப்புணர்வு மற்றும் அதிமுகவினரிடம் இருந்து ஒரு நல்ல வரவேற்பு இந்த வட்டம் நடக்க இருக்கும் 2026 தேர்தலில் அதிமுக தான் மக்களுக்கு சிறப்பாக தொண்டாற்றும் என்று மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டமானது இப்பொழுது தொடங்கியுள்ளது.

edapadi-election-campign-ulloornews

முதன் முதலில் இப்பொழுது அதிமுக தான் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளது மற்றும் மேலும் பிற கட்சிகள் அனைத்தும் இதனை ஒட்டி அதன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர் மேலும் இந்த சுற்று பயணத்தில் அதிமுகவுடன் இணைந்து பாஜகவும் சுற்றுப்பயணத்தில் மேற்கொள்ள உள்ளது இதில் அந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் இதில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.


Share the Valuable Post
Scroll to Top