
பரந்தூர் விமனநிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகளை தொடர்வதற்காக இன்று காலை பதினோரு முப்பது மணிக்கு முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகரிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது
விமானநிலையத்துக்கான இடத்தை கையக படுத்துவதில் பல்வேறு பிரச்சனை நிலவி வருவதால் இந்த கூட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதபடுகிறது மேலும் இந்த கூட்டத்தில் முதலமைச்சருடன் உயர் அதிகாரிகள் பங்கு பெறுவதால் சற்று எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

பரந்தூர் கிராம மக்கள் அங்கு விமானநிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த கூட்டத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்று எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த பரந்தூர் விமான நிலையம் ஆனது விவசாயிகளில் விவசாயம் செய்யும் இடங்களில் வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர் இந்த நிலையில் பரந்துர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பலவிதமான போராட்டங்கள் நடந்து வந்தன இந்த நிலையில் தமிழக அரசு இதற்கு என்ன முடிவு எடுக்கப் போவது என்று விவசாயிகள் அனைவரும் சிந்தித்து வருகின்றனர் இதற்கு அரசு என்ன கூறியது என்றால் விமான நிலையம் வந்துவிட்டால் அங்கே உள்ள மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் அமையும் மற்றும் போக்குவரத்து துறைக்கு மிகவும் இந்த விதமான விமான நிலையம் முக்கியத்துவமாக இருக்கும் மக்கள் வெளியூருக்கு சென்று பயணம் செல்ல தேவையில்லை பரந்தூரிலே செய்யலாம் என்று அரசு அறிவித்தது ஆனால் விவசாயிகள் அதை மறுத்துவிட்டன ஏனென்றால் விவசாய நிலங்கள் தான் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர் இதனை ஒட்டி இப்போது தமிழக முதலமைச்சரான மு க ஸ்டாலின் இதற்கான ஆலோசனையை இப்பொழுது நடத்தி வருகிறார்