
மதுரைக்கு இரண்டுநாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றும் போது அதிமுக தலைமையான கூட்டணி கட்சியே ஆட்சி அமைக்கும் என்றார்.
மேலும் ஒடிஷா மகாராஷ்ட்ரா டெல்லி வரிசையில் தமிழகத்திலும் ஆட்சியை கைப்பேற்றுவோம் என்று சூளுரைத்து உள்ளார் அதாவது ஒடிஷா மற்றும் ஹரியானாவில் நாங்கள் வென்றோம் மஹாராஷ்டராவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய வெற்றியை பெற்றோம் அதைப்போல தமிழகத்திலும் ஆட்சியை கைப்பேற்றுவோம்.

திமுக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை அதைபோல் மக்களின் மீது திமுக அரசுக்கு கவலை இல்லை அதனால் திமுக அரசை அப்புறபடுத்த மக்கள் தயாராகி விட்டனர் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதலாகவே மக்களுக்கு தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை ஆதலால் மக்களும் திமுக அரசின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர் அதனால் இனி வரும் தேர்தலில் திமுகவை நாங்கள் தோற்கடிக்கிறமோ இல்லையோ மக்களே தோற்கடிப்பார்கள் என்று இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.