Ulloor News

அமித்ஷாவின் வருகையால் அரசியல் மாற்றம் நிகழுமா

Share the Valuable Post

இரண்டு நாள் பயணமாக மதுரைக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனால் தமிழக அரசியல் அரங்கில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என்கிற எதிர்பார்ப்பு தேசிய அளவில் எதிரொலிக்கிறது.

கடந்தமுறை அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்க்கு வந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் அஇஅதிமுகவுடன் கூட்டணியை அறிவித்து உறுதி செய்தார் மேலும் பாஜகவின் மாநில தலைவரையையும் மாற்றி அறிவித்தார்.

amithsha-admk-ulloornews

இந்த முறை அமித் ஷா மதுரைக்கு வரும் பொழுது அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் மீண்டும் அமித்ஷா அவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டுக்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் ஒரு சிறு அதிரடிகள் வைத்துவிட்டு தான் செல்கிறார். அதிலும் இதுவும் ஒன்று என ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் இந்த முறை அமித்ஷா என்ன செய்யப் போகிறார் என்று பாஜகவும் மற்றும் மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

இப்படி அமித்ஷா வருகையின்போது பல அதிரடி மாற்றங்கள் நிகழ்வதால் இந்த முறையும் ஏதேனும் கட்சிகள் கூட்டணிக்குள் வருமா அல்லது வேறேனும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

amithsha-madurai-ulloornews

அமித்ஷா மதுரைக்கு வருவதினால் இப்பொழுது முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அது பொறுக்கவில்லை ஏனென்றால் மதுரைக்கு வந்தால் அங்கே நடக்கும் அரசியல் கட்சி விழாவில் பங்கேற்பார் என்று அவர் எண்ணுகிறார் இதில் அவர் அதிமுகவுடன் கைகோர்ப்பார் என்று யோசித்து அமித்ஷா வருவதை சுத்தமாக விரும்பவில்லை என்று தெரிகிறது ஆனாலும் அதிமுக இப்பொழுது பாஜகவுடன் கூட்டணி இணைய வாய்ப்பு உள்ளதாக மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஏனென்றால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே கூட்டணி வைப்பதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகிறது.


Share the Valuable Post
Scroll to Top