
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தான் எடப்பாடி பழனிசாமி இவர் இப்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் 2026 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் தேர்தலை ஒட்டி இப்பொழுது மக்கள் மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வருகின்ற ஜூலை 7ஆம் தேதி அன்று இந்த சுற்றுப்பயணம் ஆனது தொடங்குகிறது இந்த சுற்றுப்பயணம் வருகிற ஜூலை 7ஆம் தேதி தொடங்கி மற்றும் ஜூலை 21 ஆம் தேதி முடிவடைகிறது.

இதில் அவர் மொத்தம் 7 மாவட்டங்கள் செல்ல உள்ளார் இதில் மொத்தமாக 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இதனை ஒட்டி முதலில் அவர் மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார்.
என்னவென்றால் கடலூர்,திருவள்ளூர்,விழுப்புரம், கோவை,மயிலாடுதுறை,நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இதில் அவர் சுற்றுப்பயணத்திற்கு வைத்த பெயர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கட்சியான அதிமுகவை மிகப் பெரிய கட்சியாக மாற்றுவதற்காக தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குவதாகவும் அது மட்டுமல்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வென்று காட்டுவதற்காக மக்களை நேரிடையாக சென்று அஇஅதிமுக என்னவெல்லாம் மக்களுக்கு செய்தது என்பதை எடுத்துச் சொல்லி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காக இந்த சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குகிறார்.