
த.வெ.க தலைவர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சத்தில் கூறியுள்ளது.
இதை ஒட்டி கட்சியினருக்கு த.வெ.க பொது இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் கட்சி சம்பந்தப்பட்ட எந்த ஒரு விதமான பேனர் மற்றும் போஸ்டர்களை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையில் வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்டி வைக்கப்பட்ட பேனர் ஒரு முதியவர் மீது சாய்ந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது இதனால் த.வெ.கவின் கட்சி அனைத்து பேனர்களையும் பொது இடங்களில் இருந்து எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

இனிமேல் தவெக சார்பாக நடைபெறும் எந்த ஒரு விழாவிலும் இதே போல் பதாகைகளோ அல்லது ஆபத்தான முறைகளில் கொடிகளும் கட்டக் கூடாது என்பதை உத்தரவாக பிறப்பித்ததால் இதை தங்களுடைய தொண்டர்கள் வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தவெக அறிவித்தது அவர்கள் தாங்கள் எண்ணியது போலவே தவெகவின் தொண்டர்கள் இனிமேல் நாங்கள் இதே போல் ஆபத்து விளைவிக்கும் விதமாக இனிமேல் பதாகைகளோ அல்லது கொடிக்கம்பங்களையோ நாங்கள் நட்டு வைக்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் இதனால் தவெக தாங்கள் சொன்ன உத்தரவை தங்களுடைய கட்சிக்காரர்கள் பின்பற்றுவதை எண்ணி இப்போது அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் மேலும் இனிவரும் காலங்களில் இதே போல் நல்ல எண்ணங்களில் வரும் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்