
மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை நடக்க இருக்கும் முருகப்பெருமாள் பக்தர்கள் மாநாடு இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் மற்றும் இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளன இதை ஒட்டி அங்கே ஆரவாரமாக அதை கொண்டாட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் சுமார் 5 லட்சம் பொதுமக்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி கவசம் பாடுவதற்காக மாலை 6 மணி அளவில் கின்னஸில் இடம் பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன மற்றும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் வர இருக்கிறார் வந்து மக்களிடம் பேச இருக்கிறார்.
இதில் முருகனின் ஆறுபடை வீடும் கண்காட்சிக்காக மாதிரிகள் அமைத்து காட்சிகளுக்காக உள்ளன இதில் பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் மற்றும் புதுச்சேரி கவர்னர் உள்ளிட்ட பலரும் இதை பார்வையிட சாமி தரிசனத்தை மேற்கொள்ள மாநாட்டிலும் கலந்து கொள்ள வருகின்றனர்.

இந்த மாநாடானது மதுரை பாண்டி கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடக்க இருக்கிறது மற்றும் இதில் ஆன்மீகவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர் காவல்துறையினர் அங்கே கண்காணிப்பில் உள்ளனர் நாளை நடக்கவிருக்கும் முருகப்பெருமாள் பக்தர்கள் மாநாட்டிற்கு.
பாஜக தங்களுடைய வாக்கு வங்கிகளை உயர்த்துவதற்காகவே இந்த முருக பக்தர் மாநாடை மதுரையில் நடத்துவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர் ஆனால் பாஜக அதை முற்றிலும் மறுத்து இது வந்து இந்துக்களின் ஒரு உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் மேலும் கடவுள் முருகனின் அருளை பக்தர்கள் பெறுவதற்காகவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம் என்று இப்போது கூறி வருகிறது