
கடந்த சில நாட்களாகவே பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இவர்கள் இருவருக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கிறது இதனால் தொண்டர்கள் அனைவரும் கட்சி எங்கு பிரிந்து விடுமோ என்று அச்சத்திலே இருந்து வருகின்றனர் இதை ஒட்டிப் போராட்டமும் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாமகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம் திமுக தான் என்று அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார் இதனை அடுத்து ராமதாஸ் அவர்கள் அன்புமணி கூறியது அப்பாட்டமான பொய் மற்றும் அது உண்மை கிடையாது என்று கூறி வருகிறார்கள் இப்பொழுது

இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாட்டால் அன்புமணி மேடையில் வைத்து மன்னிப்பு கேட்டு உள்ளார் இதனை அடுத்து செய்தியாளர்கள் ராமதாஸ் இடம் அவர் மன்னிப்பு கோரி உள்ளார் என்று சொன்னதற்கு நீங்கள் என்ன பதில் தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் போக போக தெரியும் என்று பாட்டு பானியில் கூறிவிட்டு சென்றார்.
இதை ஒட்டி கட்சி எம்எல்ஏக்கள் நடந்த போராட்டத்தின் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் இவர்கள் குறித்தும் செய்தியாளர்கள் பாமக தலைவரான ராமதாஸ் இடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

பாமகவை ஆரம்பித்தது முதல் மிகப்பெரிய கஷ்டப்பட்டு இந்த கட்சியை நான் வளர்த்து உள்ளேன். ஆதலால் நான் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் அது என்னவென்றால் அன்புமணி அவர்களை தலைமை பண்புக்கு கொண்டு வந்ததுதான் என்று இப்போது மருத்துவர் ராமதாஸ் அவர்கள் ரொம்பவும் மனம் வருந்தி தன்னுடைய கருத்தை பொதுத்தளத்தில் முன் வைத்துள்ளார் ஆதலால் இந்த கருத்து என்பது தற்போது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறி வருகிறது.