Ulloor News

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்கடும் காலம் வரும் அமித்ஷா

Share the Valuable Post

டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு மொழி பயன்படுத்தபவர்கள் வெட்கப்படுவார்கள் மற்றும் அவமானப் படுவார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் கூறி உளளார்.

ஏனென்றால் இப்பொழுது இருக்கக்கூடிய காலங்களில் நம் தாய் மொழியை விட நம் பாரதத்தின் மொழியை விட வெளிநாட்டு மொழியை நாம் இந்தியாவில் மக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் காலப்போக்கில் நம் பாரம்பரியமும் நம் கலாச்சாரமும் அழிந்து கொண்டே வருவதாக  அமித்ஷா நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இனி வரும் நாட்களில் நமது தாய் மொழியை நம் உலகற்கே தெரியும் வகையில் அதை மேம்படுத்த வேண்டும் இதற்காக நம் தாய் மொழிக்கு நம் முக்கியத்துவம் கொடுத்து அதை முன்னுரிமை படுத்த வேண்டும்.

வரும் 2047 ஆம் ஆண்டு நமது நாட்டின் மொழியை நம் உலகிற்கே தெரியும் வகையில் நமது கலாச்சாரம் மற்றும் நம் பண்பாடு பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் நபர் வரும் நாட்களில் நமது மொழிக்கு முன்னுரிமை கொடுத்து அதனை சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து விட்டு இந்திய மொழி தெரியவில்லை என்றால் தான் வெட்கம் ஆங்கில மொழி தெரியவில்லை என்றால் அது வெட்கமில்லை இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும் இதுதான் இப்பொழுது அமித்ஷாவும் கூறி வருகிறார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாநிலங்கள் மொழியை தான் பேச வேண்டும் மற்றும் வெளிநாட்டின் சம்பந்தப்பட்ட எந்த ஒரு மொழியையும் பேசுவது அநாகரிகம் என்று திட்டவட்டமாக இப்பொழுது அமித்ஷா கூறியுள்ளார்.


Share the Valuable Post
Scroll to Top