
இந்திய எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கியவாறு இருக்கிறது இதனால் கடலில் மீன் பிடிக்க இராமேஸ்வர மீனவர்கள் மிகவும் சிரம்படுகின்றனர்
இது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது என்றும் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இராமேஸ்வர சுற்றுபுற மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படை சில நேரங்களில் மீனவர்களை கைது செய்துகொண்டும் சென்று சிறையில் அடைக்கிறது அதனால் மீன் பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் கடலுக்கு செல்லும் எங்களுக்கு முறையான பாதுகாப்பு வேண்டுமென்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என்று தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் ஆதலால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மற்ற சுற்றுப்புற மீனவர்களும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் இனிவரும் காலங்களில் இதே போல் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அப்பேர்பட்ட தாக்குதலை நடத்த விடாமல் அரசு எங்களை காக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.