
இன்று அதிகாலை பூனேவிலிருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது இந்த லேசர் ஒளியால் விமானத்தை இயக்கும் விமானிக்கு குழப்பம் ஏற்பட்டு தடுமாற்றம் நிகழக்கூடும்.
இந்நிலையில் இதே போலத்தான் கடந்த 25.05.2025 அன்று நள்ளிரவு துபாயிலிருந்து 326 பயணிகளுடன் துபாய் எமிரேட்ஸ் என்ற விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும் பொது அதை போலத்தான் லேசர் அடித்து குழப்பம் அடைய செய்தனர்.

விமானம் மீது லேசர் ஒளி லைட் அடிக்கப்பட்ட சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது இதனை ஒட்டி காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்து வருகின்றன.

இப்படியாக தொடர்ந்து விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டால் அது விமானியினுடைய கண்ணை மறைத்து விமானத்திற்கு விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் இதே போல் யாரும் தொடர்ந்து செய்யக்கூடாது என்று காவல்துறை விழிப்புணர்வு செய்து வருகின்றனர் ஆனாலும் சிலர் இதே போல் வந்து லேசர் லைட்டுகளை அடிப்பது என்பது அங்கு உள்ள பயணிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் இப்படி செய்பவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை காத்திருக்கிறது என்று காவல்துறை இப்போது தெரியப்படுத்தி உள்ளது.