
அஇஅதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு திமுக கடுமையாக அஇஅதிமுகவை எதிர்த்தது மேலும் திமுக கூட்டணி கட்சிகள் மிக வலிமையாக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று கூறி வந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ தேர்தல் நெருங்க நெருங்க எங்கள் கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் வரும் என்றும் அதனால் எங்கள் கூட்டணி இன்னும் வலிமையடையும் என்று கூறி வந்தார்.

தேர்தல் நேரத்தில் மிக வலிமையான கூட்டணியை உறுதியாக்கி திமுகவை தோற்கடித்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அஇஅதிமுக தலைமையில் நமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் நெருங்க நெருங்க வலுவான கூட்டணியை அமைக்கும் அந்த வலுவான கூட்டத்தின் மூலம் கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்து வருகிறார் மேலும் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய சில கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார் இதனால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது ஏனென்றால் அதிமுக கூட்டணி வலுவாக அமைந்தால் கண்டிப்பாக இந்த முறை ஆட்சியைப் பிடித்து விடும் என்று ஏற்கனவே அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்து வருகின்றனர்.

இந்த முறை கண்டிப்பாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டிப்பாக அதிமுகவினுடைய கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை கொண்டு வந்து விடுவார் என்று இப்போதே அவர்களுடைய தொண்டர்களும் தங்களுடைய ஆரவாரங்களை தெரிவித்து வருகின்றனர்.