
கடந்த சில மாதங்களாகவே ராமதாஸ் மற்றும் அன்பு மணி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது இந்த நிலையில் செய்தியாளர்களிடம் தனது மகன் அன்பு மணி மீது குற்றச்சாட்டை அடுக்கு அடுக்காக முன்வைத்தார் இது இருவருக்கும் இடையில் மோதலை உச்சக்கட்டத்திற்கு எடுத்து சென்றது
இதனை ஒட்டி பா ம க வில் கடும் நெருக்கடி நிலவிவருகிறது ஒரு புறம் அன்புமணி ராமதாஸ் தலைமையில சென்னையில் கூட்டம் நடை பெற்றுவருகிறது மறுபுறம் ராமதாஸ் முன்னாள் மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகிறார்.

இந்த செயல்பட்டினால் கட்சிக்குள் மேலும் குழப்பம் உண்டாகி வருகிறது இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொண்டர்கள் 200 பேர் தர்ணா போராட்டத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அன்புமணி மற்றும் ராமதாஸ் அவர்கள் இருவருக்கும் இடையே இப்பொழுது மோதல்கள் நிலவி வருகிறது இதனால் கட்சி உடைந்து விடுமோ என்று கட்சியின் தொண்டர்களும் கட்சியின் உறுப்பினர்களும் இப்பொழுது கவலையாக உள்ளனர் ஏனென்றால் அன்புமணியும் ராமதாசும் அப்பா மகன் என்பதால் அந்தக் கட்சி இப்போது உடைய வாய்ப்பு இருப்பதாக கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர் ஏனென்றால் இவர்கள் சண்டை என்பது சத்தியமாக முடிவதில்லை அது சிறிதில் இருந்து பெரியதாக வரை செல்லும் ஏனென்றால் இவர்கள் இருவருமே விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை உடையவர்கள் அல்ல யார் பெரியவர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டே இப்பொழுது கட்சி உடைய போகிறதா என்று இல்லை ஒன்று சேர போகிறதா என்று குழப்பத்திலேயே மக்கள் அனைவரும் உள்ளனர் இந்த கட்சியை உருவாக்கியவர் ராமதாஸ் ஆனால் இப்போது அன்புமணி அதில் உரிமை கொண்டு வருகின்றார் இதனால் ராமதாஸிற்கு இந்த கட்சி பிரிய போகும் என்று எண்ணங்கள் வந்து கொண்டுள்ளனர் இதற்கு அன்புமணி இந்த கட்சி பிரிவதற்கு காரணம் திமுக தான் என்று ஒரு பாணியில் பேசியுள்ளார்.