
தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் இருந்தாலும் அதில் நம் எட்டு மணி நேரமாவது தூங்கினால் தான் நம் உடலுக்கு ஆரோக்கியமானது கிடைக்கும் அதையும் இப்ப இருக்குற காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தூக்கம் இன்மையால் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் இதற்கான வழிகள் எதுவும் தெரியாமல் மக்கள் திணறியும் வருகின்றனர் அதை போக்குவதற்கு தான் பல வழிகள் உள்ளது.

நம் உணவு வகையில் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் அதே போல் இரவு நேரங்களில் நாம் ஒரு நேரத்தை அமைத்து அந்த நேரத்தில் சரியாக உறங்க துவங்கினால் நம் உறக்கமானது சிறப்பாக அமையும் மேலும் தூக்கம் வரவில்லை என்றால் நமக்கு பிடித்த இசையை நாம் கேட்க வேண்டும் அதனால் கூட நமக்கு தூக்கமானது மென்மையாக வரும் நமக்கு இனிமை தரக்கூடிய செயல்களை நாம் தூக்கம் வரும்போது நினைத்தால் நம் தூக்கமானது நிம்மதியாக ஆரோக்கியமாக இருக்கும்.

இப்ப இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைத்து மக்களும் தூங்குவதற்கு முன் தனது கைபேசியை எடுத்து அதில் சமூக வலைதளங்களில் என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்ப்பதினாலே பாதி மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வு இதனாலே மக்கள் அனைவருக்கும் தூக்கமானது வராமல் போய்விடுகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு முதலில் நம் கைப்பேசியை நாம் எடுத்து வைத்துவிட்டு நிம்மதியாக ஒரு தூக்கத்தை நாம் உறங்க வேண்டும்.