
வெண்டைக்காய் இது ஒரு விவசாய தோட்டத்தில் விளையக்கூடிய ஒரு காய்கறி ஆகும் இந்தக் காய்கறிக்கு பல நன்மைகள் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா இந்த காய்கறியை சாப்பிட்டால் என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியுமா இதுல என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா சொல்றேன் தெரிஞ்சுக்கோங்க
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று பலரும் சொல்லி நீங்க கேட்டிருப்பீங்க ஆனா வெண்டைக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியம்னு சொல்றேன்.

வெண்டைக்காய் சாப்பிடுவதினால் நம் உடம்பில் உள்ள அல்சரை உருவாக்கும் அமிலத்தை இந்த வெண்டைக்காயில் உள்ள சத்தானது சென்று மொத்தமாக அழிக்கும்.
மேலும் நம் இதயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதையும் இந்த வெண்டைக்காயில் உள்ள அந்த வழவழப்பானது நம் உடலில் ஆரோக்கியத்தை ஊட்டி நம் இதயத்திற்கு வரக்கூடிய நோயையும் தவிர்க்கும்.
இந்த வெண்டைக்காயில் நார்ச்சத்தானது அதிகமாக இருப்பதினால் இது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு காய்கறி வகையாகும்.

இதில் நார்ச்சத்தும் இருப்பதினால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு இந்த வெண்டைக்காய் ஆனது பயன்படுகிறது மேலும் உடலில் இருக்கும் எலும்பை வலுவூட்டுவதற்கு மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இந்த வெண்டைக்காய் மிகவும் உகந்ததாகும்.
மேலும் வெண்டைக்காயை நாம் அன்றாட வாழ்வில் வாரத்திற்கு ஒருமுறை எடுத்து வந்தால் நம் உடலில் உள்ள நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.