
பஹல்ஹாமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய விமான படை பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத மையங்கள்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது இதில் நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்தது
பாகிஸ்தானில் நடத்த பட்ட தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை ஒட்டி உள்ள பகுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது இதை முறியடிக்கும் விதமாக இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் பதற்றம் சூழல் நிலவியது

இதை தொடர்ந்து இருநாடுகளும் பலதரப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்தது இந்த தாக்குதல்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் தாக்குதல்களை உடனே நிறுத்துமாறு இந்தியா விடம் கோரிக்கை வைத்தது

இதனால் இந்தியாவும் தாக்குதலை நிறுத்த ஓத்துகொண்டது இதன் பிறகு மேற்குவங்கம் சென்ற பிரதமர் ஒருநிகழ்ச்சில் உரையாற்றும் பொது ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்றும் ஒருபோதும் இந்தியாவை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்றும் அதேபோல் இனிமேல் இந்தியாவில் ஏதேனும் சிறு தாக்குதல் நிகழ்ந்தாலும் தாக்குதல் செய்ப்பவர்கள் எங்குபோய் ஒளிந்தாலும் தேடி அழிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.