
பனமரத்திலிருந்து இயற்கையாக எடுக்கக் கூடிய ஒன்று தான் பதநீர் இது மிகவும் மக்களுக்கு ஒரு குளிர்ச்சியான பானமாகும் இது பனைமரம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாகும் ஏனென்றால் இது பனை மரத்தின் பூவிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு சாறு தான் இதனை நாம் மண்பானை வைத்து தான் ஒரு ஒரு சொட்டாக சேமித்து அதை கல்லாக எடுத்து அதில் சுண்ணாம்பை சேர்ப்பதனால் அதன் தன்மை மாறுகிறது பிறகு அது பதநீராக உருமாறுகிறது.

இந்த பானத்தை மக்கள் அருந்தும் பொழுது அவர்கள் சோர்வாக இருந்தாலும் சரி ஒரு விதமான அலுப்பாக இருந்தாலும் சரி உடனடியாக சுறுசுறுப்பாக மாறுவார்கள் இது மிகவும் இனிப்பாக இருக்கும் மற்றும் இதன் சத்து மக்களுக்கு மிகவும் நல்லதாக அமைகிறது இது தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது இது அதற்கான காலத்தில் மட்டும்தான் அது அதிகமாக கிடைக்கும் மற்ற காலங்களில் அது மிகவும் கம்மியாகத்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது மற்றும் உடலின் சூட்டை தணிப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது இது குடித்தால் வயிற்றுப்புண் சரியாகிறது மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் இதன் மூலமாக அளிக்கப்படுகிறது மேலும் இதை நாம் பனைமரம் ஓலையில் தான் இதை நாம் குடிக்க வேண்டும் அப்பொழுதுதான் அதன் உண்மையான சுவை நம்மளுக்கு தெரியும் மேலும் பதநீர் குடிப்பது மிகவும் நன்மை குணங்கள் நிறைந்ததாக உள்ளது நீங்களும் இதை குடித்து பாருங்கள் ஒரு மாதத்திற்கு அதன் பலன் உங்களுக்கே தெரியும்.